போளை விளையாட்டு!

சிறுவர் முதல் இளைஞர் வரை போளை அடித்து விளையாடிய காலம் அது.வீட்டு வளவுகpolaiளுக்குள்ளும் தெருவோரங்களிலும் வயல் வெளிகளிலும் போளை அடித்து விளையாடிய காலம் மறக்க முடியாதது.யாழ்,மண்ணில் இடப்பெயர்வுகளுக்கு முன் வாழ்ந்த காலம் என்பது மிகவும் வித்தியாசமானது.நவீன வசதிகள் ஏதும் அன்று இல்லாத போதும் கிராம வாழ்க்கை என்பது மிகவும் குதூகலமாகவே இருந்தது.அதிகாலையில் எழுந்து நண்பர்கள் கூடி போளை அடித்து விட்டே பள்ளிக்கூடம் செல்வோம்.பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியிலும் போளை அடிப்போம்.இவையெல்லாம் இப்போது நினைக்கும்போது அந்த பொன்னான வாழ்க்கையை இழந்து விட்டோம் என்று சொல்ல முடியவில்லை பிரிந்து விட்டோம் என்பதே சரியாக இருக்கும்.உங்களுக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என்ற நோக்கத்தோடு இப்பதிவு.

பின்னூட்டமொன்றை இடுக