ரஷ்யாவில் விழுந்தது எரிநட்சத்திரம்- 400 பேர் படுகாயம்!

மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த வெடிப்பின்போது சில வீடுகளின் கூரைகள் நொறுங்கின, பல வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன. இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரை நொறுங்கியது. இதில் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் மீது விழ இருந்த பெரிய எரிகல்லை அந் நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதில் அது சிதறி விழுந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.

பின்னூட்டமொன்றை இடுக