அன்பிலார் எல்லாம் தமக்குரியர்-மற்றோர்
என்றும் உரியர் பிறர்க்கு”என்றான் வள்ளுவன்.
ஆனாலும் நாம் என்ன செய்தோம்?
நமக்கெனவும் வாழாமல்,பிறர்க்கெனவும்
வாழாமல்,ஒரு சிலருக்கென வாழ்ந்தோம்.
இதனால் வாழ்க்கை நரகமாகியது.
மனம் ரண களமாகியது.இன்பம் தொலைந்து
துன்பமே மனமெங்கும் குடியிருந்தது.
இங்கே நாம் செய்த தவறென்ன?அன்பிலாரை
நாம் உயர்வாக நேசித்தோம்!
பண்பிலாரை நாம் பண்பாக மதித்தோம்.
இவையெல்லாம் நாம் துன்பப்பட காரணமாயிற்று.
இனியும் ஏன் நாம் துன்பத்தை
சுமக்க வேண்டும்?அன்பிலார் என்று
தெரிந்த பின்பும் அவர்களுக்காக இன்னும் ஏன்
சிலுவை சுமக்க வேண்டும் என்று ஒவ்வொரு
மனமும் கேள்வி கேட்டு கொள்ளட்டும்.
மனம் உண்மையை விளங்கிக் கொள்ளட்டும்.
காதலும் காதலும் இணைந்தால்
காதலுக்கு தோல்வியே இல்லை.
இனியுமேன் கலக்கம்?
இன்பம் எங்கே?இன்பம் எங்கே?
என்று தேடு-அது எங்கிருந்தபோதும்
அதை நாடி ஓடு!
